செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் சந்தைக்கு வரலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரான ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில், மூடிக்கிடக்கும் பள்ளிகளையும் திறக்க வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாகிறது.
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பரவலின் இரண்டாம் அலை கொடிய பாதிப்பையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் ஒரு சில மாதங்களில் 3ம் அலை பரவல் தொடங்கும் என்பதும், அது குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே வல்லுநர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையாக உள்ளது. இது உறுதியான ஒரு விஷயம் என்றாலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
Also Read:
மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு
பொதுவாக குழந்தைகளுக்கு தீவிர கொரோனா தொற்று ஏற்படாவிட்டாலும் கூட அண்மையில் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதுடன் ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது. மேலும் ஆபத்தான கருப்பு பூஞ்சை பாதிப்பும் குழந்தைகளிடே காணப்படுகிறது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான செளம்யா ஸ்வாமிநாதன் கூறுகையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைக்கும் வரையில் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூடுமான வரையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், குழந்தைகளுக்கு நோய் தொற்றை பரப்பாமல் இருக்கலாம் என தெரிவித்தார். மேலும் விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைக்கும் எனவும் சமூக பரவல் குறைந்த பின்னர் நாம் பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
Also Read:
டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் குழந்தைகளுக்கு என்னென்ன தடுப்பூசிகள் கிடைக்க இருக்கிறது?
கோவேக்ஸின் (Covaxin):
2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் 2/2ம் கட்ட பரிசோதனை அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை அடிப்படையில் கோவேக்ஸின், ஸைடஸ் காடிலா தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகிறது.
ஸைடஸ் காடிலா (Zydus Cadila):
அகமதாபாத்தைச் சேர்ந்த Zydus Cadila நிறுவனம் ZyCoV-D என்ற பெயரில் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கியிருக்கும் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடுவதற்கு அவசர கால அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. பரிசோதனை தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த வாரமே ZyCoV-D தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி கிடைத்தால் வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் காலகட்டத்தில் ZyCoV-D தடுப்பூசிகளின் சப்ளை தொடங்கும் என நிறுவனத்தார் கூறுகிறார்கள்.
ஃபைசர் (Pfizer)
அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய நாடுகளில் 12 வயதுக்கு மேர்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி தான் செலுத்தப்படுகிறது. மேற்கண்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் எவ்வித தாமதமும் இன்றி தடுப்பூசி அங்கீகரிக்கப்படுகிறது. அதன்படி ஃபைசர் தடுப்பூசிக்கு விரைவில் இந்தியாவில் அனுமதி வழங்கப்படும் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்தார். மேலும் இது பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் வழங்கப்படும் என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாடெர்னா (Moderna)
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடெர்னா தடுப்பூசி நல்ல பலனைத் தருவதாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது. புதிதாக எந்தவொரு பக்கவிளைவுகளும் பரிசோதனையில் வெளியாகவில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் மாடெர்னா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்டால் 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அது இரண்டாவது ஆப்ஷனாக இருக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும் மாடெர்னாவை இந்தியாவுக்கு கொண்டுவர எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.