கொரோனா அப்டேட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் கடிதம்!

கொரோனா வைரஸ் தீவிரம், அதை தடுக்கும் வழிமுறைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அப்டேட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் கடிதம்!
தலைமைச் செயலாளர் சண்முகம்
  • Share this:
கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து, கொரோனா அறிகுறி இருப்பர்களுக்கு உரிய மருத்துவ அறிவுரைகள், பரிசோதனைக் கூட வசதிகள் போன்றவை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரம், அதைத் தடுக்கும் வழிமுறைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு என்று தனியாக வார்டு ஏற்படுத்த வேண்டும். வைரஸ் பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுப்பதற்கு, நோயாளிகள் முதல் மருத்துவ பணியாளர்கள் வரை கிருமி நாசினி கொண்டு  கைகளை  அடிக்கடி கழுவவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி அந்த குழுவில் உள்ளாட்சி அமைப்புகள்,பள்ளி மற்றும் உயர் கல்வி அதிகாரிகள், காவல்துறை, வருவாய் மற்றும்  விமானநிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளை இடம்டபெறச் செய்து கொரோனா குறித்து விழிப்புணர்வுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தலைமைச்செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். சுற்றுப்புறச் சூழலை துாய்மையாக வைத்துக்கொள்வதை இந்த குழுவின் மூலம் உறுதிபடுத்த வேண்டும்.

மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் விழிப்பணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுங்கள் வழங்கவேண்டும். அதேபோல மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கைகளை நன்றாக கழுவுவதற்குத் தேவையான கிருமிநாசினி திரவங்களை வைத்திருக்க வேண்டும்.கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர்கள் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading