தமிழகத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்: முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தல்!

தமிழகத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்: முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தல்!
முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருடன் காணொலி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தற்போதைக்கு ரயில் மற்றும் விமான சேவைகளையும், மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்தையும் அனுமதிக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.


ரயில் மற்றும் லாரிகளில் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கொண்டு செல்ல அனுமதித்து உணவு நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதியும், அத்தியாவசியப் பொருள்களும் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் கோரியுள்ளார்.

தமிழகத்தில் 3 ஆயிரத்து 280 கோடி ரூபாய் ஒதுக்கி, 2 கோடி குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாயும் , தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்துக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதிக அளவு சப்ளை செய்யவேண்டும் எனக் கோரியுள்ள முதல்வர், மருத்துவ உபகரணங்கள் வாங்க தான் கோரியிருந்த 3,000 கோடி ரூபாயும். கொரோனாவுக்கு பிந்தைய மீட்பு பணிகளுக்காக 9,000 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 510 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், 2020-21 நிதியாண்டுக்கான நிதிக்குழு ஒதுக்கீட்டில் முன்கூட்டியே 50 சதவீதத்தை தற்போது விடுவிக்கலாம் என முதல்வர் கூறினார்.

அதோடு 15 வது நிதிக்குழுவின் மாறுபட்ட கணக்கீட்டு முறையால் மாநில பேரிடர் நிதியில் மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு 120 சதவீதம் உயர்ந்த நிலையில், தமிழகத்துக்கு 64 சதவீம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading