MK Stalin : மாஸ்க் எப்படி போடனும்..? சொல்லிக்கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
MK Stalin : மாஸ்க் எப்படி போடனும்..? சொல்லிக்கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
முதலமைச்ச ஸ்டாலின்
சிலர் மூக்குக்குக் கீழே, வாய்க்கு கீழே அல்லது தாடைக்குக் கீழ் கழுத்துப்பகுதி என இவ்வாறாகத்தான் மாஸ்கை கடமைக்கென அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டுகிறார்.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மாஸ்க் மிக முக்கியமானது என்பதை முதல் அலையிலிருந்தே மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இருப்பினும் மக்கள் அதில் காட்டி வரும் அலட்சியமும் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணம் என மருத்துவர்களின் கருத்துக்களும், மருத்துவ ஆய்வுச் சான்றுகளும் பல இருக்கின்றன. இருப்பினும் மீண்டும் மீண்டும் அரசும் , மருத்துவர்களும் பரிந்துரைப்பது ‘கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்’ ( Wear Your Mask ) என்பதுதான். அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலன் கருதி, மாஸ்க் குறித்த அவசியத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதோடு மாஸ்க் எப்படி அணிய வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்.
மாஸ்க்கின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது டபுள் மாஸ்கிங்தான் சிறந்தது என அதுவும் அப்டேட் ஆகிவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் அதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. வீட்டில் இருந்தாலும் மாஸ்க் அணியுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் தள்ளப்பட்டுவிட்ட நாம் மருத்துவமனையில் கொரோனா நோயாளியின் அருகில் இருந்தாலும் சரியாக முகக்கவசம் அணிவதில்லை என்ப்துதான் உண்மை.
சிலர் மூக்குக்குக் கீழே, வாய்க்கு கீழே அல்லது தாடைக்குக் கீழ் கழுத்துப்பகுதி என இவ்வாறாகத்தான் மாஸ்கை கடமைக்கென அணிந்துகொண்டிருக்கின்றனர். இதை முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில் சுட்டிக்காட்டுகிறார். பின் எப்படி அணிய வேண்டும். எது சரியான முறை என்பதை அணிந்து காட்டி கற்றுத் தருகிறார்.
மாஸ்கைத் தொடர்ந்து, சானிடைசர் பழக்கமும் அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெளியே சென்றால் மேற்பரப்புகளில் இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுகள் கைகள் மூலம் மூக்கில் நம்மை அறியாமலே செல்லலாம் என்பதால் கைகளை சானிடைசர் கொண்டு துடைப்பதன் மூலம் கொரோனா வைரஸை அழிக்கலாம் என்கின்றனர். எனவே சானிடைசர் அவசியத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் விவரிக்கிறார். அதோடு அதை கைகளில் எவ்வாறு தடவ வேண்டும் என்பதை சொல்லித்தருகிறார்.
இறுதியாக தடுப்பூசிபோடுவதன் அவசியத்தையும் பேசுகிறார். அதில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டு ஆரோக்கியமாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மூன்று நிமிடங்கள் 21 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பகிரப்பட்ட 3 மணி நேரத்தில் 188k பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.