இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் - கோப்புப் படம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளார்.

 • Share this:
  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் இன்று சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அளிக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. கடந்த 30-ஆம் தேதியுடன் 8-ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், இம்மாதம் 1-ஆம் தேதி முதல் 9 ஆம் கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 10 நாட்களாக 1000-க்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

  இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திக்கிறார். கொரோனா பாதிப்பு தொடங்கிய பின் மாதந்தோறும் ஆளுநரை சந்தித்து அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளித்து, தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்கமும் அளித்து வருகிறார். அந்த வகையில் இன்றும் ஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளார்.

  மேலும் படிக்க...முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை..  மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிக்கையும் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு கூடுதல் கவனம் பெறுகிறது.
  Published by:Vaijayanthi S
  First published: