MK Stalin : கொரோனா தொற்று ... 3 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சேலம், ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

  • Share this:
    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது. இதேபோன்று, ஈரோட்டில் ஆயிரத்து 500-க்கு அதிகமாகவும், சேலத்தில் 600-க்கு அதிகமாகவும் உள்ளது.

    இந்நிலையில், இந்த மூன்று மாவட்டங்களுக்கும் செல்லும் முதலமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். அத்துடன், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    ஏற்கனவே, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அவரவர் தொகுதிக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஈடுபட அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், முதலமைச்சரும் மாவட்ட வாரியாக ஆய்வுப் பணியை தொடங்குகிறார்.

    Must Read : டெல்லியிலிருந்து 35 பார்சல்களில் மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன

     

    இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: