சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடவும் வேண்டும்.

  • Share this:
    தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழகத்தில், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கடந்த 8ஆம் தேதி வரை 29,18,110 தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,30,08,440 தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

    தமிழகத்திற்கு, மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கவில்லை. இதனால், பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலத்திற்கு ஆயிரம் பேருக்கு 302 பேர் என்ற முறையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது இது மிகக்குறைவு. குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முறையே 533,493 மற்றும் 446 என்ற முறையில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனவே, தமிழகத்திற்கு ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். மேலும், சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடவும் வேண்டும்.” இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

    வெளிநாடுகளில் இருந்து உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் போது ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கோரி நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தடுப்பூசி செலுத்த ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    Must Read : இந்தியாவில்தான் அதிக மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.. மோடி அரசின் கொள்கை நாட்டை நாசப்படுத்தியுள்ளது - டி.ராஜா

    ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசின் தொகுப்பில் 71 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரையில் 20 லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசிகளே வந்துள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்து தடைபட்டு வருகிறது. இந்நிலையில், நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசி தேவைப்படுவதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து குறைவான தடுப்பூசிகளே கிடைப்பதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: