தென் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்

தென்மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம் மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.

தென் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்
முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வரும் 31-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இதன்படி, சேலத்திலிருந்து இன்று காலை புறப்படும் முதலமைச்சர், திண்டுக்கல்லுக்கு செல்கிறார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, மதுரைக்கு இன்று மதியம் செல்கிறார்.

மேலும் படிக்க...செய்தி பார்த்தால் பணம் கொட்டும்.. ₹100 கோடி சுருட்டல்.. மோசடி நடந்தது எப்படி?


நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை செல்வார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது, விவசாயிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்தித்துப் பேச உள்ளார்.

முன்னதாக, கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading