திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

 • Share this:
  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

  திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் ரீலாவுடன் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

  திமுக எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

  80% ஆக்சிஜன் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 20% சதவிகிதம் குறைக்கப்பட்டு 60 சதவிகித ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

  மேலும் பார்க்க:-

  திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: என்ன சொல்கிறது மருத்துவமனை அறிக்கை?


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Gunavathy
  First published: