ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் மரணம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

 • Share this:
  முன்னாள் சிபிஐ அதிகரியான ரகோத்தமன், வயது 72. சென்னைசென்னை கே.கே.நகரில் வசித்த அவர்.கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்துசென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

  நேற்று இரவு அவருக்கு முச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ரகோத்தமன் 1968 ஆம் ஆண்டு சி.பி.ஐ.யில் உதவி ஆய்வாளராக பணியை தொடங்கியுள்ளார். சி.பி.ஐ.யில் லஞ்ச ஒழிப்புபிரிவு,பொருளாதார குற்றப்பிரிவு, பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட பல பொருப்புகளில் பணிபுரிந்துள்ளார்.

  Also Read : விடியும் வரை காத்திரு என்றேன், விடியாமலே போய் விட்டது - நடிகர் மாறன் மறைவிற்கு மல்லை சத்யா உருக்கமான பதிவு

  முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் தலைமை விசாரணை அதிகாரிக நியமிக்கப்ப்ட்டு அதில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். 1988 சி.பி.ஐ.மெச்ச தகுந்த பணி,1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளார். ராஜூவ் கொலை வழக்கு என்ற புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

  அதில் பேரறிவாளன் நிரபராதி என்கிற கருத்தையும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். ரகோத்தமனின் உடல் அவரது சொந்த ஊரான உழுந்துபேட்டையை அடுத்துள்ள பாண்டூர் கிரமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: