ஹோம் /நியூஸ் /கொரோனா /

சிதம்பரத்தில் கொரோனா பாதித்த 2 வயது குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்...!

சிதம்பரத்தில் கொரோனா பாதித்த 2 வயது குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்...!

தற்பொழுது ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்பொழுது ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்பொழுது ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த 2 வயது குழந்தை 8 வயது சிறுவர் உட்பட ஐந்து பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கான கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இந்த மருத்துவமனை அறிவிக்கப்பட்டு வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இதுவரையில் 6 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று ஒரே நாளில் 2 வயது குழந்தை 8 வயது சிறுவன் உட்பட 5 பேர் பூரண குணமடைந்து அவர்களது வீட்டிற்கு திரும்பிச் சென்றனர். காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 3 பேரும் நேற்று பூரண குணமடைந்து வீட்டிற்கு சென்றனர்.

இதனால் தற்பொழுது ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஐந்து பேரும் டெல்லி சென்று திரும்பியவர்கள் மற்றும் அதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் ஆவர்கள்.பூரண குணமடைந்து வீடு திரும்பிய அவர்களை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைதட்டி உற்சாகமாக அனுப்பி வைத்தனர்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Cuddalore