• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் குறைந்தது ஆட்டு இறைச்சி விலை: கோழிக்கறி விலை ஏற்றம்

சென்னையில் குறைந்தது ஆட்டு இறைச்சி விலை: கோழிக்கறி விலை ஏற்றம்

கோழி விலை கூடியது

கோழி விலை கூடியது

சென்னையில் ஆட்டு இறைச்சி விலை  குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கோழி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  • Share this:
சென்னையில் கோழி கறி விலை தொடர்ந்து 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆட்டிறைச்சி ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இருந்தபோதிலும் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையில் இருக்கக்கூடிய ஆர்வம் சற்று குறைந்து இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல மீன் விலையும் குறைய துவங்கியுள்ளது. மத்தி , சங்கரா , சீலா, கவலை உள்ளிட்ட மீன்கள் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. வஞ்சிரம் மீன் 800 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரமாக கோழி கறியின் விலை குறைவாக இருந்த நிலையில் தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... 

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: