Home /News /coronavirus-latest-news /

கோவில்பட்டி பகுதியில் மட்டன், சிக்கன் விலை கிடுகிடுவென உயர்வு..!

கோவில்பட்டி பகுதியில் மட்டன், சிக்கன் விலை கிடுகிடுவென உயர்வு..!

கோப்புப்படம்

கோப்புப்படம்

கோழி, ஆடுகளின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்வு பெற்றுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கியது முதல் ஆடு, கோழி இறைச்சி விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தது. கடந்த சில வாரங்களில் மக்கள் இறைச்சி வாங்குவதில் ஆர்வம் காட்டாத காரணமாக விலைகள் குறைந்து காணப்பட்டன. இந்த வாரம் சற்று அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த வாரம் ஆட்டு இறைச்சி தனிக்கறி 800 ரூபாய்க்கும், எலும்புக்கறி ரூ 700க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோழி இறைச்சி ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த வாரம் ஆட்டு இறைச்சி ரூ.100-க்கும், கோழி இறைச்சி ரூ.60-ஆகவும் உயர்ந்துள்ளது. ஆட்டு இறைச்சி தனிக்கறி 900ரூபாய்க்கும், எலும்புக்கறி 800 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது.

இதே போன்று கோழி இறைச்சி ரூ 60 உயர்ந்து ரூ 220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து இறைச்சி விற்பனையாளர் முருகன் கூறும் பொழுது ஞாயிற்றுக் கிழமை மட்டும்தான் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், மற்ற நாட்களில் வியாபாரம் சுமார்தான் என்றார். மேலும் கோழி, ஆடுகளின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்வு பெற்றுள்ளதாகவும், இன்னும் 2 வாரங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




href="https://www.youtube.com/News18TamilNadu">YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chicken, Kovilpatti, Mutton

அடுத்த செய்தி