அலோபதி மருத்துவ முறை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக பாபா ராம் தேவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்து சில வாரங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அலோபதி என்பது முட்டாள்தனமான அறிவியல், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் கொரோனாவை குணப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன' என்ற அவரது கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தனது கருத்தை மாற்றிக்கொண்ட அவர், நல்ல அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர் போன்றவர்கள், என்று கூறியிருந்தார். எனினும் அலோபதி மருத்துவர்கள் பாபா ராம்தேவ் மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அலோபதி மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதாக அவர் மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய மருத்துவ சங்கத்தின் சத்தீஸ்கர் பிரிவு அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராய்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இ.பி.கோ 188, 269 , 504 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் போர்டின் தலைவர் மருத்துவர். ராகேஷ் குப்தா, இந்திய மருத்துவ சங்கத்தின் ராய்பூர் தலைவர் மற்றும் விகாஸ் அகர்வால் ஆகியோர் ராம்தேவ் மீது புகார் அளித்தவர்களின் முக்கியமானவர்கள் ஆவர்.
இதையும் படிங்க: காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..
கடந்த ஓராண்டாகவே பாபா ராம்தேவ் தவறான தகவல்களை தெரிவித்து வருவதாகவும் கொரோனா சிசிக்கையில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்திய அரசு ஆகியவற்றுக்கு எதிராக மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baba Ramdev