சென்னை: அதிகரிக்கும் குணமடைதல் விகிதம்.. 62 வார்டுகளில் மட்டுமே 50% தொற்று பாதிப்பு..

சென்னையில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 96,438 ஆக உள்ளது.  இதில் 81,530 பேர் குணமடைந்து வீடு திரும்பி்யுள்ளனர். 2056 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், 12,852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Share this:
சென்னையில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 96,438 ஆக உள்ளது.  இதில் 81,530 பேர் குணமடைந்து வீடு திரும்பி்யுள்ளனர். 2056 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், 12,852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவொற்றியூரில் 442 பேர்,  மணலியில் 158 பேர்,  மாதவரத்தில் 543 பேர், தண்டையார்பேட்டையில் 634 பேர்,  ராயபுரத்தில் 808 பேர், திருவிக நகரில் 1,129 பேர், அம்பத்தூரில் 1159 பேர், அண்ணா நகரில் 1,456 பேர்,  தேனாம்பேட்டையில் 1,014 பேர்,  கோடம்பாக்கத்தில் 1840 பேர், வளசரவாக்கத்தில் 1005 பேர், ஆலந்தூரில்  565 பேர், அடையாற்றில் 1,203 பேர், பெருங்குடியில் 464 பேர்,  சோழிங்கநல்லூரில் 430 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 58.71 சதவீதமும், பெண்கள் 41.29 சதவீதமும் உள்ளனர்.

இதன்படி,சென்னையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றுகளில் 50 சதவீத தொற்றுகள் 62 வார்டுகளில் பதிவாகியுள்ளது. இதன்படி வடக்கு வட்டாரத்தில் ராயபுரம் மண்டலத்தில் உள்ள 59-வது வார்டில் ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 105 மற்றும் 127 வது வார்டுகளிலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக 131-வது வார்டில் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். அதிக பாதிப்பு உள்ள 62 வார்களில் 30க்கு மேற்பட்ட வார்டுகள் வடக்கு வட்டாரத்தில் உள்ளது.

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படி பார்த்தால் மத்திய வட்டாரத்தில் அதிகம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன்படி மத்திய வட்டாரத்தில் உள்ள 128,126,137, 112, 120 ஆகிய வார்டுகளில் அதிகம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
குறிப்பாக அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading