Home /News /coronavirus-latest-news /

மருத்துவமனையில் நடந்த அச்சமூட்டும் சம்பவம்...! சென்னை பெண்ணின் ட்விட்டர் பதிவால் மாநகராட்சி நடவடிக்கை

மருத்துவமனையில் நடந்த அச்சமூட்டும் சம்பவம்...! சென்னை பெண்ணின் ட்விட்டர் பதிவால் மாநகராட்சி நடவடிக்கை

”எதிரில் இருந்த டீக்கடையைப் பார்த்ததும் அச்சம் ஏற்பட்டது. இந்த வரிசையில் காத்திருந்த மூவர், அந்த டீக்கடையில் எந்த முகக்கவசம் அணியாமல் உள்ளே இருந்தனர்”

”எதிரில் இருந்த டீக்கடையைப் பார்த்ததும் அச்சம் ஏற்பட்டது. இந்த வரிசையில் காத்திருந்த மூவர், அந்த டீக்கடையில் எந்த முகக்கவசம் அணியாமல் உள்ளே இருந்தனர்”

”எதிரில் இருந்த டீக்கடையைப் பார்த்ததும் அச்சம் ஏற்பட்டது. இந்த வரிசையில் காத்திருந்த மூவர், அந்த டீக்கடையில் எந்த முகக்கவசம் அணியாமல் உள்ளே இருந்தனர்”

சென்னை அண்ணா நகரை சேர்ந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் அம்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்தும், அதன் பின் அடுத்ததுடுத்து மருத்துவமனையில் நடந்த அச்சமூட்டும் சம்பவம் குறித்தும் பதிவு செய்தது, பேசு பொருளான நிலையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சுவாதி என்பவரின் அம்மா வெளியிடங்களுக்கு எங்கும் பயணிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட யாருடனும் தொடர்பில் இல்லாத போதும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர், ஊரடங்கு காலத்தில் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய கடைக்கு மட்டுமே தேவையான பொருட்கள் வாங்கசென்று வந்துள்ளார்.

அவரது அம்மாவிற்கு காய்ச்சல் ஏற்பட தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அரசின் உதவி எண்ணிற்கு அழைத்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியதும், சுவாதி மற்றும் அவரது அம்மா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி சென்றுள்ளனர்.

அவரது அம்மாவிற்கு சேலான அறிகுறிகளே இருப்பதால் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில், "நாங்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு 45 நிமிடங்களுக்கு மேலாகக் காத்திருந்தோம். புறநோயாளிகள் பிரிவில் ஏற்கெனவே 30 பேர் காத்திருந்தனர். அங்கிருந்த காவலாளியிடம் கேட்டபோது, அவர்கள் அனைவரும் கொரோனா நோயாளிகள். மருத்துவமனையில் அனுமதிக்கக் காத்திருக்கின்றனர் என்றார்.

எதிரில் இருந்த டீக்கடையைப் பார்த்ததும் அச்சம் ஏற்பட்டது. இந்த வரிசையில் காத்திருந்த மூவர், அந்த டீக்கடையில் எந்த முகக்கவசம் அணியாமல் உள்ளே இருந்தனர். என் அம்மாவை பரிசோதித்த மருத்துவர், லேசான கொரோனா தொற்று அறிகுறிகளே உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். வீட்டில் மேலும் 3 பேர் இருப்பதாகக் கூறியதற்கு, அவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டும் பரிசோதனை செய்யச் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். மாநகராட்சியில் தெரியப்படுத்தச் சொன்னார். அம்மாவுக்கு சில மருந்து மாத்திரைகள் எழுதித்தந்தார்.

இங்கே, நிறைய மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறது. நிறைய பேருக்கும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறது. அவர்கள் யாரும் பரிசோதனை செய்துக் கொள்வதில்லை என மிகவும் சாதாரணமாக அந்த மருத்துவர் எனது அம்மாவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினோம். எனது பாட்டி குறித்தும் மிகுந்த கவலையாக இருக்கிறது. 85 வயதான அவருக்கு நீரழிவு நோய் மற்றும் இதயப் பிரச்னைகள் இருக்கின்றன. சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது" என பதிவிட்டிருந்தார்.

இவரது ட்விட்டர் பதிவு இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்ததும், உடனடியாக சென்னை மாநகராட்சி சுகாதாரக்குழு, சுவாதியின் வீட்டுக்குச் சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் தாயாரை தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்துக்கு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். வீட்டில் இருந்த மற்ற மூவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி