Home /News /coronavirus-latest-news /

இரண்டு வாரங்களாக தொற்றின் தீவிரம் குறையாத 2 மண்டலங்கள்...! தென் சென்னையிலும் அதிகரிக்கும் எண்ணிக்கை!

இரண்டு வாரங்களாக தொற்றின் தீவிரம் குறையாத 2 மண்டலங்கள்...! தென் சென்னையிலும் அதிகரிக்கும் எண்ணிக்கை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னையில் 61.90 சதவீதம் ஆண்கள், 38.06 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் இரண்டு வாரங்களாக தொற்றின் தீவிரம் குறையாமல் இருந்து வருகிறது. அதேபோல், தென் சென்னையிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

தமிழகத்தில் மே 5ம் தேதி உறுதி செய்யப்பட்ட 716 தொற்றுகளில், சென்னையில் 510 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 4,882 பேரில், 814 பேர் குணமடைந்துள்ளனர்.  38 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில் சென்னையில் பாதிக்கப்பட்டோர் 64 சதவிகிதம். அதேபோல், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் சென்னையில் தான் 61 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 86 பேரும், கோடம்பாக்கம் 83 பேரும், தேனாம்பேட்டையில் 64 பேரும், அண்ணாநகரில் 56 பேரும், அடையாறு 55 பேரும், வளசரவாக்கத்தில் 47 பேரும்,  தண்டையார்பேட்டையில் 35 பேரும், திரு.வி.க.நகரில் 32 பேரும், திருவொற்றியூரில் 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் , ஆலந்தூரில் 11 பேரும், அம்பத்தூரில் 10 பேரும், பெருங்குடியில் 3 பேரும், மாதவரத்தில்  3 பேரும்,  சோழிங்கநல்லூரில் இரண்டு பேரும், மணலியில் ஒருவரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களாக இராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தொற்றி தீவிரம் குறையாமல் இருந்து வருகிறது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 119 வார்டுகளில் பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாகவும், 60 வார்டுகளில் 10- 30 வரை எண்ணிகையில் பாதிப்பு உள்ளது. திரு.வி.க.நகரில் உள்ள ஒரு வார்டில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

மண்டலம் மே 1 - மே 12

ராயபுரம் 216 - 828

கோடம்பாக்கம் 116 - 796

திரு.வி.க.நகர் 259 - 622

தேனாம்பேட்டை 132 - 522

வளசரவாக்கம் 60 - 426

அண்ணா நகர் 91 - 405

தண்டையார்பேட்டை 101 - 362

அடையாறு 21 - 267

அம்பத்தூர் 33 - 234

திருவொற்றியூர் 19 - 118

மாதவரம் 4 - 68

ஆலந்தூர் 9 - 57

பெருங்குடி 9  -54

சோழிங்கநல்லூர் 3 - 54

மணலி 3 -51

வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மாதவரம், மணலி ஆகிய 5 மண்டலங்களில் இதுவரை 1,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இது சென்னையின் மொத்த பாதிப்பில் 29.2 சதவீதமாகும். அதிக பட்சமாக ராயபுரத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்னா நகர் ஆகிய 5 மண்டலங்களில் இதுவரை 2,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.8 சதவீதமாகும். குறிப்பாக கோயம்பேடு பரவலால் சென்னை மத்திய மண்டலத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.

தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் இதுவரை 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, மொத்த பாதிப்பில் 14.5 சதவீதமாகும்.

சென்னையில் 61.90 சதவீதம் ஆண்கள், 38.06 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chennai, CoronaVirus

அடுத்த செய்தி