காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவால் மரணம்: தமிழ்நாடு டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி

கொரோனா பாதிப்பால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். அவருக்கு தமிழ்நாடு டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவால் மரணம்: தமிழ்நாடு டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன்.
  • Share this:
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (57). இவர் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் கடந்த மாதம் 11ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also see:
அஞ்சலி செலுத்தும் தமிழ்நாடு டிஜிபி திரிபாதி.


உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பட்டினப்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உயிரிழந்த அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தினார்.கடந்த மாதம் 17 ம் தேதி சென்னையில் கொரோனா நடவடிக்கைகளில் ஈடுபட்டு தி.நகர் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading