கொரோனா பரவலை தடுக்க சென்னை ரிச்சி தெரு கடைகள் திறக்க புதிய ஏற்பாடு

கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக சென்னை ரிச்சி தெருவில் செயல்படும் எலக்ட்ரானிக் கடைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் திறக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க சென்னை ரிச்சி தெரு கடைகள் திறக்க புதிய ஏற்பாடு
ரிச்சி தெருவில் அலைமோதிய கூட்டம்.
  • Share this:
சென்னையில் முழு ஊரடங்கு முடிந்து, நேற்று முன்தினத்திலிருந்து தளர்வுகள் உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெரிய மால்களைத் தவிர, வணிக வளாகங்கள், கடைகள் காலை 10 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் அடிப்படையில் சென்னை ரிச்சி தெருவில் உள்ள நூற்றுக்கணக்கான செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கடைகள், பழுதுபார்க்கும் கடைகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் செயல்படாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதற்காக பயன்படுத்தப்படும் செல்போன்கள், லேப்டாப்புகள் ஆகியவற்றை பழுது பார்ப்பதற்காகவும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதற்காகவும் பொதுமக்கள் ரிச்சி தெருவில் அதிகமாக கூடினர்.


கொரோனா காலத்தில் ரிச்சி தெருவில் உள்ள கடைகள் வியாபாரம் நன்கு சூடு பிடித்தாலும், சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரிச்சி தெருவில் உள்ள வணிகர்களின் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

வணிகர்களின்  ஒத்துழைப்போடு வாரத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் கடை திறக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர். ரிச்சி தெருவில் செயல்படும் கடைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு திங்கள், புதன் வெள்ளி ஒரு பிரிவு கடைகளும், செவ்வாய் வியாழன் சனி ஆகிய தினங்களில் மற்றொரு பிரிவு கடைகளும் திறந்திருக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்
இந்த தினங்களில் எந்த கடைகள் திறந்து இருக்கப்படும் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் பச்சை மற்றும் சிகப்பு நிற ஸ்டிக்கர் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் 10 மணி முதல் 6 மணி வரை இந்த கடைகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இதன் மூலம் பொது மக்கள் கூட்டத்தை குறைத்து சமூக இடைவெளியுடன் வியாபாரம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading