• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருதயவியல் கட்டிடத்திற்கு சீல்: மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருதயவியல் கட்டிடத்திற்கு சீல்: மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு!

ராஜீவ் காந்தி மருத்துவமனை

ராஜீவ் காந்தி மருத்துவமனை

மருத்துவருடன் பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் என, 60-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  • Share this:
    சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருதயவியல் முதுநிலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இருதயவியல் சிகிச்சைக்கான ஏழு மாடி கட்டிடம் மூடப்பட்டு விட்டது.

    இதனால் இருதய நோய் சம்பந்தமான எந்த சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காகவும், இனி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சேவைகளை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்த முடியாது.

    மேலும் அந்த மருத்துவருடன் பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் என, 60-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: