சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில்வே தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் 3 நபருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று
கோப்பு படம்
  • Share this:
சென்னை மெட்ரோ ரயில்வேயில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் பணிபுரிந்த 20 நபர்களும் இன்று பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே, ஒரு ரயில்வே ஓட்டுனர் உயிரிழந்துள்ள நிலையில், காவலர் ஒருவர் குணமடைந்து உள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு முடிந்த பின்னர் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்போது தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மெட்ரோ ரயில்வே உயரதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது மற்ற ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க....

முன்பதிவு டிக்கெட் கட்டணம் - 4 ரயில் நிலையங்களில் திரும்பப் பெறுவதற்கான தேதி அறிவிப்பு 
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading