• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • முழு ஊரடங்கு - இன்று முதல் இறைச்சி & மீன் கடைகள் இயங்காது

முழு ஊரடங்கு - இன்று முதல் இறைச்சி & மீன் கடைகள் இயங்காது

கோப்புப்படம்

கோப்புப்படம்

பொது முடக்கம் காரணமாக சென்னையில் இன்று முதல் 30ம் தேதி வரை இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகியவற்றுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இறைச்சிக் கடைகளும் மீன் கடைகளும் மூடப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதனால் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய நான்கு இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் இன்று முதல் மூடப்படவுள்ளது.

    Also see:

     

    மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்டபட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோழி, ஆடு, மாடு இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகள் 19.06.2020 முதல் 30.06.2020 வரை முழுமையாக மூடப்படுவதாக அறிவித்துள்ள நகராட்சி நிர்வாகம், பொது மக்களும் வியாபாரிகளும் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டுமென்று கூறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: