• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பரோல் நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதிகள்: 11 கைதிகளும் சிறையில் சரணடைய உத்தரவு

பரோல் நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதிகள்: 11 கைதிகளும் சிறையில் சரணடைய உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் பரோலில் சென்ற 11 கைதிகளும் ஜூன் 15-ம் தேதிக்குள் சிறையில் சரணடையவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் தண்டனைக் கைதிகளாக இருந்து பரோலில் சென்றவர்கள், சிறைக்கு திரும்ப இயலாத நிலை இருந்ததால், அவர்களுக்கான பரோல் காலத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது

தமிழகத்தில் பரோலில் சென்ற 11 கைதிகளுக்கும் பரோல் நீடிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பரோல் காலம் முடிந்து சிறைகளுக்கு திரும்பும் கைதிகளை தனிமைப்படுத்த தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும், பெண்கள் சிறைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி அனுப்பிய கடிதத்தை மேற்கோள்காட்டி, 11 கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்டு, பரோல் நீட்டிப்பு உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதிகள், இந்த 11 கைதிகளும் ஜூன் 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

ஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு...! ரஜினிகாந்த் அட்வைஸ்

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: