• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தடுப்பு பணியில் 100 தன்னார்வலர்கள் குழுக்கள்

கொரோனா தடுப்பு பணியில் 100 தன்னார்வலர்கள் குழுக்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

"பொதுமக்களை கண்காணிப்பு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும்"

  • Share this:
சென்னையில் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வரும் சனிக்கிழமை முதல் 2500 களப்பணியாளர்கள், 100 குழுக்காளாக பிரிந்து களப்பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிட்ட 30 வார்டுகளில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. மற்றப் பகுதிகளில் குறைந்த அளவிலேயே வைரஸ் தொற்று உள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் நுண் அளவில் கண்காணித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2000 குடிசைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற 2500 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் வெளியிட்டுள்ளார்.

100 குழுக்கள் அமைப்பு:

சென்னையில் 1979 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் சுமார் 25 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவில் ஒரு திட்ட தலைவர் (Project Head), திட்டப்பணி மேலாளர், தகவல் மேலாளர், கள மேற்பார்வையாளர்(Field Superviser) மற்றும் களப்பணியாளர்கள் (Out Reach Worker) என பிரிக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்படும்.

இந்தக் குழுக்களில் மொத்தம் 2500 களப்பணியாளர்களும், 15 களப்பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என 166 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு குழுவிற்கு ஒருவர் என 100 குழுவிற்கு 100 திட்ட பணி மேலாளரும், 100 தகவல் மேலாளரரும் நியமிக்கப்பட்ட உள்ளனர்.

களப்பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

ஒவ்வொரு களப்பணியாளரும் 300 வீடுகளை கண்காணிப்பார்கள். களப்பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படை தேவைகளான உணவு, மளிகைப் பொருட்கள் குடிநீர், பொது கழிப்பிடம் போன்ற காரணங்களுக்காக வெளியே சென்று வருவதை கண்காணித்து அந்த இடங்களில் கூட்டம் கூடாமல் இடைவெளி கடைபிடிப்பது பொதுமக்களிடையே அறிவுறுத்த வேண்டும்.

ஒவ்வொரு வீட்டில் பெண்களின் வயது, பாலினம், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை சேர்த்து, எளிதில் நோய்வாய்படக்கூடிய 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு, உதவி புரிதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.

ஒவ்வொரு களப்பணியாளர் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வைரஸ் தொற்று பாதித்த வீடுகளை கண்காணித்து சரியான நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என கண்டறிந்து பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்,ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

பொதுமக்களோடு களப்பணியாளர்கள் தொடர்பில் இருந்து நோய் தொற்று தொடர்பான ஆரம்ப நிலை அறிகுறிகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளுக்கு அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லவும். மருத்துவர்கள் ஆலோசனைபடி தேவைப்படின் அறிகுறி உள்ள நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய மாநகராட்சி மருத்துவ அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.

இந்த களப்பணியாளர்கள் வரும் சனிக்கிழமை முதல் களப்பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும், இந்தப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு கவனமாக பணியாற்ற வேண்டும் எனவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களை கண்காணிப்பு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: