முதல்வர், அமைச்சர்கள் குறித்து "ஹலோ ஆப்"  மூலம் அவதூறு பதிவு! பொறியாளர் கைது..!

சென்னையில் முகாமிட்டுள்ள கோவை போலீசார் இதில் தொடர்புடைய திமுக பிரமுகரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர், அமைச்சர்கள் குறித்து
ஹாலோ ஆப் மூலம் அவதூறு பதிவு செய்தவர்.
  • Share this:
கொரோனா வைரஸ் அமைச்சர் தங்கமணி சாயலில் இருக்கின்றது எனவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி ஆகியோர் குறித்தும்   சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட சென்னையை சேர்ந்த பொறியாளர் ஒருவரை கோவை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்கான். அதிமுக தகவல்  தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகின்றார். இவர் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்திருக்கிறார். அந்த புகார் மனுவில் ஹலோ ஆப் எனும் செயலியில் கருப்பு குதிரை என்ற பெயரில்  பதிவுகள் செய்து வரும் நபர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி  குறித்து  இழிவுபடுத்திப்பதிவிட்டு வருகிறார்.

இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுடன், அதிமுகவினரை மிரட்டும் விதமாகவும் இருப்பதாக  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த நபர் செய்த பதிவுகளில் கொரோனா வைரஸ், அமைச்சர் தங்கமணி சாயலில் இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி எனவும் பதிவிட்டு இருப்பதாக கூறி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.


அதிமுக நிர்வாகி ரியாஸ்கான் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். அப்போது  சென்னை வளசரவாக்கத்தைச்  சேர்ந்த சுதர்சன் என்பவர் கருப்பு குதிரை என்ற பெயரில் இது போன்ற பதிவுகள் செய்து இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கோவையில் இருந்து சென்னைக்கு கிளம்பி  சென்ற தனிப்படை  காவல்துறையினர் அரும்பாக்கத்தில்  வைத்து சுதர்சனை கைது செய்தனர். சுதர்சனிடம் விசாரணை மேற்கொண்ட போது திமுக பிரமுகர் ஒருவர் அறிவுறுத்தல் பேரில் முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக பதிவுகள் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுதர்சன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.மேலும் சென்னையில் முகாமிட்டுள்ள கோவை போலீசார் திமுக பிரமுகரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading