கொரோனா வைரஸ் தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றிய 184 ஊர்க்காவல் படையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
184 ஊர்க்காவல் படையினர் 84 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மீண்டு பணிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊர்காவல்படையினருக்கு அங்கீகாரம்

கெளரவித்த சென்னை மாநகர காவல் ஆணையர்
இந்த நிகழ்வில்பெருநகர சென்னை கூடுதல் காவல் ஆணையர் அமல்ராஜ், பெருநகர சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தினகரன், பெருநகர சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அருண் மற்றும் ஊர்காவல்படையின் உதவி சரக படை தளபதி மஞ்சித் சிங் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்