காற்றில் பறந்த விதிகள்.. மறு உத்தரவு வரும்வரை வணிக நிறுவனங்களை மூட மாநகராட்சி உத்தரவு..
சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது.

கோப்புப்படம் (PTI)
- News18 Tamil
- Last Updated: July 26, 2020, 7:16 AM IST
சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது.
குறிப்பாக, பெரிய வணிக நிறுவனங்களை தினசரி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், வாடிக்கையாளர்கள் , விற்பனையாளர்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. இதை பின்பற்றாத கடைகள் 14 நாட்கள் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களில் இந்த விதிகள் பின்பற்றவடுவதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. குறிப்பாக மால் வகையுள்ள வணிக நிறுவனங்களில் தனி மனித இடைவெளி பின்பற்றபடுவதில்லை என்ற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் அனைத்தையும் மறு உத்தரவு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தி.நகர், புரசைவாக்கம், பாடி உள்ளிட்ட இடங்களில் பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்து மறு உத்தரவு வரும் வரை மூடி இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பணியாளர்கள ஒலிபெருக்கி மூலம் தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்புகளை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, பெரிய வணிக நிறுவனங்களை தினசரி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், வாடிக்கையாளர்கள் , விற்பனையாளர்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. இதை பின்பற்றாத கடைகள் 14 நாட்கள் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களில் இந்த விதிகள் பின்பற்றவடுவதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. குறிப்பாக மால் வகையுள்ள வணிக நிறுவனங்களில் தனி மனித இடைவெளி பின்பற்றபடுவதில்லை என்ற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது.