சென்னை மக்களே... உங்கள் அவசர தேவைகளுக்காக பிரத்யேக இணையதளம் அறிமுகம்!

சென்னை மக்களே... உங்கள் அவசர தேவைகளுக்காக பிரத்யேக இணையதளம் அறிமுகம்!
  • Share this:
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை மக்களின் அவசர தேவைகள் கருத்தில் கொண்டு ஒரு பிரத்யேக இணையதளத்தை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அத்தியவாசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அவசர தேவைக்காக ஊர்களுக்கு செல்பவர்கள், உணவின்றி தவிப்பவர்கள், நிவாரண நிதி கொடுக்க நினைப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி பிரத்யேக இணயைதளத்தை உருவாக்கி உள்ளது.

அதன்படி  Covid19.chennaicorporation.gov.in  என்ற இந்த இணையதளம் வாயிலாக நிவாரண நிதி வழங்குவது, அவசர பயணங்களுக்கு அனுமதி பெறுவது, அம்மா உணவகம் அமைந்துள்ள இடங்கள், சூப்பர் மார்க்கெட் கடைகள் மற்றும் இன்னபிற அவசர தேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தின் தகவல்களும் இந்த ஒரே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வாசிப்பவரக்ள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி பயன்பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading