Home /News /coronavirus-latest-news /

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பளவைக் குறைத்தது சென்னை மாநகராட்சி!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பளவைக் குறைத்தது சென்னை மாநகராட்சி!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தன்னார்வலர்களை கொண்டு வழங்கிட வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தன்னார்வலர்களை கொண்டு வழங்கிட வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தன்னார்வலர்களை கொண்டு வழங்கிட வேண்டும்.

சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு தெருவையும் அடைப்பதை தவிர்த்து, வைரஸ் தொற்று பாதித்த அடுக்குமாடி குடியிருப்பு அல்லது இரண்டு மூன்று, வீடுகள் கொண்ட பகுதிகளை மட்டும் தடுப்புகள் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றியமைக்க மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுசுகாதாரத்துறையில் மண்டல கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி மண்டல நல அலுவலர்கள் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்:-

1. சென்னையில் மே 12ம் தேதி வரை 587 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முழு தெருவையும் அடைப்பதை தவிர்த்து, வைரஸ் தொற்று பாதித்த பகுதி அதாவது அடுக்குமாடி குடியிருப்பு அல்லது இரண்டு மூன்று, வீடுகள் கொண்ட பகுதிகளை மட்டும் தடுப்புகள் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றியமைக்க வேண்டும்.

2. சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய அறிகுறிகள் உள்ள நபர்கள் மற்றும் முதியவர்கள், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோரை கண்டறிந்து மருத்துவமனைகளுக்கோ அல்லது கோவிட் காப்பு மையங்களுக்கோ அந்தந்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை கொண்டு அழைத்து செல்ல மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தன்னார்வலர்களை கொண்டு வழங்கிட வேண்டும்.

4. கட்டுப்படுத்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்பாடு செய்து தரவும், கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி அலுவலர்கள் வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் மறுபயன்பாட்டுடன் கூடிய துணியால் ஆன முகக்கவசங்கள் இன்று முதல் வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, CoronaVirus

அடுத்த செய்தி