வீட்டுத் தனிமையை மீறி வெளியே வந்தால் ரூ.2,000 அபராதம் -சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

வீட்டுத் தனிமையை மீறி வெளியே வந்தால் ரூ.2,000 அபராதம் -சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கொரோனா

வீட்டு தனிமையில் இருப்பவர்களும், அவர்களது குடும்பத்தினரும் விதியை மீறி வெளியே வந்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  சென்னை பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஸ்கிரீனிங் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சிறப்பு அதிகாரி சித்திக் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக இந்த மையத்திற்கு வந்து கொரோனா பாதிப்பின் தன்மை குறித்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றார். சென்னையில் தற்போது 15 ஸ்கிரீனிங் மையங்கள் உள்ள நிலையில், இதனை 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

  அதைத்தொடர்ந்து பேசிய ஆணையர் பிரகாஷ், சென்னையில் தற்போது 619 முன்களப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். முன்கள பணியாளர்கள் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், மாநகராட்சி பணியாளர்கள் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தடுப்பூசி செலுத்தப்படுவதால் கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரகாஷ், வீட்டு தனிமையில் இருப்பவர்கள் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.  தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் மருந்து போதிய அளவு கையிருப்பு உள்ளதாகக் கூறிய அதிகாரிகள், சென்னையில் கூடுதலாக 2,400 ஆக்ஸிஜன் படுக்கைகளும், பிற மாவட்டங்களில் 3,600 ஆக்ஸிஜன் படுக்கைகளும் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: