அனைத்து வீடுகளிலும் கொரோனா விழிப்புணர்வு சுவரொட்டி - சென்னை மாநகராட்சி அறிிவிப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களில் உள்ள வீடுகளிலும் கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வுகளையும், உதவி எண்களையும் கொண்ட சுவரொட்டி ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அனைத்து வீடுகளிலும் கொரோனா விழிப்புணர்வு சுவரொட்டி - சென்னை மாநகராட்சி அறிிவிப்பு
சென்னை மாநகராட்சி அலுவலகம். (கோப்புப்படம்)
  • Share this:
சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவ உதவிகளும், ஆலோசனைகளும் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் மாநகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களில் உள்ள வீடுகளிலும் விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Also see:இதில், கொரோனா தொற்று தொடர்பான மண்டல வாரியான அவசரகால உதவி எண்களும், ரிப்பன் மாளிகையின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களும் இடம்பெற்றிருக்கும். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கும் மக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். கொரோனா தொற்று தொடர்பான எந்தவொரு மருத்துவ உதவிக்கும், உளவியல் ஆலோசனைக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் உதவி எண்களை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading