Home /News /coronavirus-latest-news /

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை...!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை...!

"ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூர்வாரும் பணியாளர் ஒருவர், கடந்த 10-ம் தேதி உயிரிழந்துள்ளார்"

"ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூர்வாரும் பணியாளர் ஒருவர், கடந்த 10-ம் தேதி உயிரிழந்துள்ளார்"

"ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூர்வாரும் பணியாளர் ஒருவர், கடந்த 10-ம் தேதி உயிரிழந்துள்ளார்"

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 34 பேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்க சென்னை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.  

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது நோய்தொற்றுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு கருணைத் தொகை 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர் 10 பேர், உதவி பொறியாளர்கள் மூன்று பேர், ஓட்டுநர்கள் மூன்று பேர், சாலை பணியாளர்கள் மூன்று பேர், உதவி வருவாய் அலுவலர்கள் 2 பேர், இளநிலை பொறியாளர் ஒருவர், இளநிலை உதவியாளர் ஒருவர், கண்காணிப்பாளர் ஒருவர், சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த வரி மதிப்பீட்டாளர் ஒருவர் என மொத்தம் 35 பேருக்கு தொற்று ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.

இதில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூர்வாரும் பணியாளர் ஒருவர், கடந்த 10-ம் தேதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பணியாளர்களின் ஆய்வக பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், மண்டல அலுவலர் மற்றும் துறைத் தலைவர்கள் மூலமாக கருணை தொகையை  பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உயிரிழந்த மாநகராட்சி பணியாளரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக, அரசுக்கு அனுமதி கோரி குறிப்பு அனுப்பப்படும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி