ஒவ்வொரு தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா... சென்னையில் பாதிப்பு எங்கே அதிகம்?

ஒவ்வொரு தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா... சென்னையில் பாதிப்பு எங்கே அதிகம்?

மாதிரி படம்

சென்னையில் கொரோனாவால் அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  சென்னையில் கொரோனா தொற்று பரவல் மூன்று மண்டலங்களில் கடுமையாக உள்ளது. அண்ணா நகர், தேனாம்பேட்டை, திரு.வி.க. நகர் மண்டலங்களசென்னையில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களில் 30 விழுக்காட்டை கொண்டிருக்கின்றன.

  தேனாம்பேட்டையில் 3044 பேரும், அண்ணா நகரில் 3041 பேரும் தற்போது சிகிச்சை பெறுகிறார்கள். திருவிக நகர் மண்டலத்தில் 2741 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

  இந்த 3 மண்டலங்களில் உள்ள 36 விழுக்காடு தெருக்களில் ஒவ்வொரு தெருவிலும் 3 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா நகரில் 194 தெருக்களிலும், தேனாம்பேட்டையில் 351 தெருக்களிலும் 3 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

  சென்னை முழுவதும் 3 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்ட தெருக்கள் 1,996 உள்ளன. அதில் 118இல் பத்து பேருக்கும் மேல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  அண்ணா நகர், தேனாம்பேட்டை பகுதிகளில் மக்கள் நெருக்கடி அதிகமாக இருப்பதே  கொரோனா தொற்று எளிதில் பரவ காரணமாக கூறப்படுகிறது. வணிக வளாகங்கள், கடைகள், பெரு நிறுவனங்கள் அதிகமாக இருப்பதும் தொற்று எளிதில் பரவ வாய்ப்பாக அமைந்ததாக தெரிகிறது.
  Published by:Vijay R
  First published: