சென்னையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவின் மற்ற நகரங்கள் மற்றும் மாநிலங்களை விட அதிகம் என்றாலும்  பரிசோதனைகள் தாமதமாக தான் அதிகப்படுத்தப்பட்டுள்ளன

சென்னையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: May 23, 2020, 9:12 PM IST
  • Share this:
சென்னையில் இன்று ஒரே நாளில் ராஜஸ்தானிலிருந்து வந்த ஒருவர் உட்பட 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் பதிவான பாதிப்புகளிலேயே இது தான் அதிகமாகும்.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 22-ம் தேதி 569 பேர், 21-ம் தேதி 567 பேர், 20-ம் தேதி 557 பேர், 19-ம் தேதி 552 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.


நேற்று பாதிக்கப்பட்டவர்களை விட 56 பேர் கூடுதலாக இன்று சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மே முதல் வாரம் வரை ஒரு நாளுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதன் பின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த மாதத்தில் எட்டு நாட்களில் சென்னையில் 500க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே 10ம் தேதி - 509 பேர் பாதிப்பு

மே 11ம் தேதி- 538 பேர் பாதிப்புமே 12ம் தேதி- 510 பேர் பாதிப்பு

மே 19ம் தேதி- 552 பேர் பாதிப்பு

மே 20ம் தேதி- 557 பேர் பாதிப்பு

மே 21ம் தேதி-567 பேர் பாதிப்பு

மே 22ம் தேதி- 569 பேர் பாதிப்பு

மே 23ம் தேதி-625 பேர் பாதிப்பு

சென்னையில் தற்போது பத்து லட்சம் பேருக்கு 12,673 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை இந்தியாவின் மற்ற நகரங்கள் மற்றும் மாநிலங்களை விட அதிகம் என்றாலும்  பரிசோதனைகள் தாமதமாக தான் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

கோயம்பேடு தொற்று பரவலை தவிர்க்காதது,  மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பது, பொது கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் கொண்ட குடிசைப்பகுதிகள் ஆகிய காரணங்களால் சென்னையில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.










First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading