Home /News /coronavirus-latest-news /

ஒரு முறை கொரோனா பாதித்தவருக்கு இரண்டாவது முறையும் தொற்று ஏற்படுமா?

ஒரு முறை கொரோனா பாதித்தவருக்கு இரண்டாவது முறையும் தொற்று ஏற்படுமா?

கடுமையான கோவிட் -19 உடன் தொடர்புடைய நோய்களில் பாலியல் அடிப்படையிலான வேறுபாடுகள் ஆண்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று  நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் (Nature Communications) வெளியிட்ட ஆய்வில் எழுதினர். கூடுதலாக, உலகளவில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதாச்சாரத்தில் உள்ள ஒற்றுமையை ஆசிரியர்கள், "மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் மிகவும் பொதுவானதாகக் கொமொர்பிடிட்டிகள் (comorbidities in hospitalised Covid-19 patients) காணப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Corona | ஒரு முறை கொரோனா தொற்று ஏற்பட்டால் 2-ஆவது முறை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என பரவலாக கேள்வி உள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    சிலருக்கு 2-வது முறையும் தொற்று உறுதியான நிலையில், 2-வது முறை தொற்று ஏற்பட்ட செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றி வந்த 51 வயதான செவிலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நீரிழிவு நோயாளியான இவருக்கு கடந்த மாதம் தொற்று ஏற்பட்டு குணமடைந்தார். மீண்டும் கொரோனா வந்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செவிலியின் கணவரிடம் இருந்து அவருக்கு தொற்று பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    தமிழகத்தில் செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். அதே போன்று சென்னையில் தனியார் நிறுவன ஊழியருக்கு இரண்டாவது முறை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பொதுவாக எந்த வகை வைரஸும் ஒரு முறை மனிதர்களை தாக்கும் போது அந்த வைரஸின் எதிர்ப்பு சக்தியும் தானாக மனித உடலில் வந்து விடும். எனவே 2-வது முறை தொற்று ஏற்படாது என்பதே உலகளவில் தற்போதைக்கு உள்ள ஆராய்ச்சிகளின் முடிவு எனக் கூறும் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சித்ரா, 2-ஆம் முறை பாசிடிவ் ஏற்பட வைரஸின் சில உயிரற்ற பாகங்கள் உடலில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். ஆனால் மீண்டும் உயிருள்ள கொரோனா வைரஸ் தாக்கி பாசிடிவ் வந்ததா என கண்டறிய அந்த வைரஸின் ஜீனை ஆராய வேண்டும் என சித்ரா கூறுகிறார்.

    2-வது முறை ஒருவருக்கு கொரோனா வந்ததாக எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்கிறார் மருத்துவர் சுப்பிரமணியன். கொரோனாவால் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தபட்சம் சில வாரங்களாவது இருக்கும் எனக் கூறும் அவர், மீண்டும் பாசிடிவ் வந்தாலும் பிரச்னை இல்லை எனக் கூறுகிறார். அதனால், குணமடைபவர்களுக்கு மீண்டும் சோதனை செய்யப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    கொரோனா பற்றிய ஆய்வுகள் முழுமையாக முடியாத நிலையில், 2-வது முறை தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு வரை செல்லுமா என்பதை வருங்கால ஆய்வு முடிவுகளே கூற வேண்டும்.

    Also See:

    கொரோனா சிகிச்சையில் புது நம்பிக்கையான டெக்ஸாமெதசோன் - விலை எவ்வளவு? யார் யாருக்கு பலனளிக்கும்? விரிவான தகவல்கள்...

    இந்திய படை வீரர்கள் உயிரிழப்பு குறித்த தகவல்களை அரசு இதுவரை தெரிவிக்காதது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

    Published by:Sankar
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி