சென்னையில் புதிய தொற்றுக்கள் குறைந்து வரும் நிலையில் உயர்ந்த இறப்பு விகிதம்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதால் இறப்பு விகிதம் 1.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

சென்னையில் புதிய தொற்றுக்கள் குறைந்து வரும் நிலையில் உயர்ந்த இறப்பு விகிதம்
கோப்பு படம்
  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 4 கட்ட ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. சென்னை பொறுத்தவரை கொரானா தொற்று அதிகமான காரணத்தினால் சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஜீலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.

ஜூன் 20-ம் தேதி வரை சென்னையில் 39,641 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 21,796 பேர் குணமடைந்துள்ளனர். 17,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் எனவும் இறப்பு எண்ணிக்கை 559 பேர் என்கிறது சென்னை மாநகராட்சி.

ஜுலை 7-ம் தேதி வரை சென்னையில் 71,230 பாதிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தோர் 47,735 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை  22,374 ஆகவும் இறப்பு 1120 ஆகவும் இருக்கிறது.


சென்னையில் நாளுக்குநாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக எந்த பாதிப்பு இல்லாத இளம் வயதினர் மரணம் அடைந்து வருகிறனர்.

 எனவே இனி வரும் நாட்களில் சோதனையை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் வார்டு வாரியாக மருத்துவ முகாம் அமைக்கபட்டன.

இதனால் பரிசோதனை தீவிரப்படுத்தபடுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Also read... சென்னையில் ஜுலை தொடங்கி படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

ஜூன் மாதம் 20-ம் தேதி 559 பேர் இறந்துள்ளனர். ஜூன் 30-ம் தேதி வரை 888 பேர் இறந்துள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி 929 பேர், 2-ம் தேதி 964, 3-ம் தேதி 996 பேர், 4-ம் தேதி 1033 பேர், 5-ம் தேதி 1054 பேர், 6-ம் தேதி 1082 , 7-ம் தேதி வரை 1120 இறந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு சென்னையில் மட்டும் 30 முதல் 35 பேர் கொரானா தொற்றால் இறந்துள்ளனர்.

மண்டல வாரியாக இறப்பு விகிதம் -  ஜூலை 7ம் தேதி வரை

திருவொற்றியூர் -65

மணலி -15

மாதவரம் - 27

தண்டையார்பேட்டை - 163

ராயபுரம் - 161

திரு.வி.க.நகர் -115

அம்பத்தூர் -39

அண்ணாநகர் -97

தேனாம்பேட்டை -167

கோடம்பாக்கம்  -110

வளசரவாக்கம் - 35

ஆலந்தூர் - 21

அடையாறு - 61

பெருங்குடி - 25

சோழிங்கநல்லூர் - 9

மற்ற மாவட்டங்கள்  -10

மொத்தம் _1120 , சதவீதம் 1.57

ஜூலை 1-ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னையில் மட்டும் 232 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading