• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தன

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தன

கோப்புப்படம்

கோப்புப்படம்

”மாற்றப்பட்டுள்ள விதிகளின்படி குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகின்றன”

  • Share this:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் புதிய பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் 27ம் தேதி நிலவரப்படி 356 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. ஒட்டுமொத்தமாக சென்னையின் 15 மண்டலங்களில் ஏப்ரல் மாதத்தில் இருந்து மொத்தம் 1,151 பகுதிகள், கட்டுப்படுத்த பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதில், இதுவரை 795 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தண்டையார்பேட்டையில் தொற்று எண்ணிக்கை 1160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த மண்டலத்தில் 437 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டையார்பேட்டையில் இரண்டு இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. அதேபோல், வளசரவாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 758 ஆக இருக்கக்கூடிய நிலையில், 2 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

முன்னதாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்கள் புதிய தொற்று இல்லாத பட்சத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பின், அது 14 நாட்களாக கண்காணிப்பு குறைக்கப்பட்டது. மேலும், ஒரு நபருக்கு தொற்று ஏற்பட்டால், ஒட்டுமொத்த வீதியின் நடமாட்டத்தை கட்டுப்ப்படுத்தாமல், பாதிக்கப்பட்ட நபரின் குடியிருப்பை மட்டும் கண்காணிப்பது என வழிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணம்.

மேலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்களில் சராசரியாக 30 சதவிகிதத்தினர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அல்லாமல், வேறு பகுதியில் இருந்து தொற்று கண்டறியப்படுகிறது. இதுவும், கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை குறைய காரணம். இருப்பினும், புதிய பகுதிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே அதிகரிக்கப்பட்டுள்ளது.

மே மாத தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. அது தற்போது ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் அதிக தொற்று பாதிப்பு உள்ள ராயபுரம் மண்டலத்தில் 98 பகுதிகளும், அடுத்தபடியாக திரு.வி.க., நகர் மண்டலத்தில் 53 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. அதேபோல், இராயபுரத்தில் இதுவரை 135 இடங்களிலும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 137 இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: