எச்சரிக்கையாக இருங்கள்...! சென்னையில் வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது

எச்சரிக்கையாக இருங்கள்...! சென்னையில் வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
  • News18
  • Last Updated: October 9, 2020, 3:58 PM IST
  • Share this:
சென்னையில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து 70 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது அது மீண்டும் உயர்ந்து நேற்றைய எண்ணிக்கை 13,000ஐ கடந்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்



கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்


தற்போது சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மொத்தம் 70 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட  பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.



Also read... சென்னை மக்களே உஷார்.. மீண்டும் வேகமாக அதிகரிக்கிறது கொரோனா தொற்று..அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 21 பகுதிகளும், தண்டையார்பேட்டையில் 11 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
First published: October 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading