சென்னையில் தீயாய் பரவும் கொரோனா...தொற்று பாதிப்பு கிடுகிடு உயர்வு

சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 18 , 673 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் கொரோனா தொற்றால் இதுவரை 4,337 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 18 , 673 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் கொரோனா தொற்றால் இதுவரை 4,337 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 • Share this:
  சென்னையில் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ள நிலையில் தேனாம்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்தது.

  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,109 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகர் மண்டலத்தில் 2,0 37 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 1, 698 பேரும் திருவிக நகர் மண்டலத்தில் 1,529 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 1, 708 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 18 ,673 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் கொரோனா தொற்றால் இதுவரை4, 337 பேர் உயிரிழந்து உள்ளனர்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: