Home /News /coronavirus-latest-news /

சென்னையில் பாதுகாப்பு பணியில் கமாண்டோ படை? காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் பாதுகாப்பு பணியில் கமாண்டோ படை? காவல் ஆணையர் விளக்கம்

 கமண்டோ படை

கமண்டோ படை

சென்னையில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.

    இதையடுத்து சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    ஆனால் அதனையும் மீறி சிலர் பாதுகாப்பு இல்லாமல் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவது முககவசம் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல் செய்து வருகின்றனர். இதனால் வேகமாக தொற்று பரவி வருகிறது.

    இந்நிலையில் மக்கள் நெருக்கம் மிகுந்த கொருக்குப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் கமாண்டோ படையினர் பணி அமர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    Also read... வாக்கிங் சென்ற முதியவருக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி

    இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் கமாண்டோ படை வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் தேவை தற்போது இல்லை என்று குறிப்பிட்டார்
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai, CoronaVirus

    அடுத்த செய்தி