Home /News /coronavirus-latest-news /

கொரோனா நோயாளிக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது... செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன? இளம்பெண் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்

கொரோனா நோயாளிக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது... செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன? இளம்பெண் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்ட்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்ட்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையும், பாதுகாப்பு உபரணங்களும் வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நோயாளி ஒருவர் அளித்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு மிக முக்கியமானது. அங்கு இதுவரை 10,888 நபர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 214 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 2668 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், இங்கு பரவலை தடுக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சுகாதார ஏற்பாடுகளும், சிகிச்சையும் முறையாக வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பெண் கொரோனா நோயாளி கூறும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்க நான்கு நாட்கள் ஆனதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கு வந்த நோயாளியை 3 மணி நேரம் தாமதப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

"கடந்த ஜூலை 17 அன்று பரிசோதனை செய்தேன். நான்கு நாட்களாக என்னுடைய பரிசோதனை முடிவுகளை  தெரிவிக்கவில்லை. செங்கல்பட்டு மருத்துவமனை உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பலமுறை முயற்சித்த பிறகு ஜூலை 21 அன்று, உங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது வந்து அட்மிட் ஆகி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள்.
படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு
அட்மிட் ஆவதற்காக ஜூலை 21 மாலை 6 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த போது, கொரோனா வார்டில் இடம் இல்லை என்று தெரிவித்து அருகில் உள்ள வெளி நோயாளிகள் பிரிவில் அட்மிட் ஆக சொல்லி அனுப்பினார்கள். அங்கு சென்றால், `அங்கிருந்து ஏன் இங்கு வந்தீர்கள்? அங்கேயே அட்மிஷன் போட வேண்டியது தானே?` என்று திருப்பி அனுப்பினார்கள்.

மீண்டும் அங்கு செல்கையில், `இங்கு இடம் இல்லை என்று சொல்லி அங்கேயே அட்மிட் ஆகுங்கள்` என்று திருப்பி அனுப்பினார்கள். இப்படியே, ஒரு கொரோனா நோயாளியை இங்கும் அங்கும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழித்து இரவு 9:30 மணிக்கு அட்மிட் செய்தார்கள்.

தனிமைப் படுத்தும் வார்டுக்கு நீங்களே செல்லுங்கள் என்று, எந்தவொரு பொறுப்பான வழிகாட்டுதலும் இல்லாமல் அனுப்பி வைத்தனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,"சரி, என்று வார்டுக்கு வந்து பார்த்தால், இங்கு நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. நோயாளிகள் உள்ள அறை, படுக்கை, கழிப்பறை என எதுவும் தூய்மை செய்யப்படாமல் அசுத்தமாக இருந்தது.இங்கு வந்து மூன்று நாட்களாகி விட்டது. மாஸ்க் கேட்டால், 'ஸ்டாக் இல்லை நாங்கள் என்ன செய்ய முடியும்' என்று சொல்லி மாஸ்க் தரவில்லை.வீட்டில் இருந்து வரும்போது அணிந்து வந்த ஒரே மாஸ்க்கையே தற்போது வரை அணிந்து உள்ளேன்.

உணவுகளை மட்டும் வார்டில் வந்து தருகிறார்கள். ஆனால், வார்டில் தண்ணீர் கிடையாது. தண்ணீர் வேண்டுமெனில் இரண்டு மாடி இறங்கி கீழே செல்ல வேண்டும். அங்கு ஒரு சின்டெக்ஸ் தொட்டியில் வரிசையில் நின்று பிடித்துக் கொள்ள வேண்டும். நேற்று அதுவும் கூட இல்லை.அங்கிருந்த பணியாளர்களிடம் தண்ணீர் இல்லை என்று சொன்னதற்கு, `அரை மணி நேரம் ஆகும், பொறுத்திருங்கள்` என்று தெரிவிக்கிறார்கள்.ஒரு கொரோனா நோயாளி தண்ணீர் கூட இல்லாமல் இருக்க முடியுமா? நாங்கள் செத்துப் போனால் என்ன செய்வார்கள்? நானாவது பரவாயில்லை, முதியவர்கள், தீவிர நோயாளிகள் என்ன செய்வார்கள்?" என்று கவலையுடன் கேள்வி எழுப்பினார்.

Also read... கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி வேலையிழந்த ஊழியர் - மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மேலும் பேசியவர்,"அறிகுறி இல்லாத என்னை, தீவிர நோயாளிகள் உடன் அனுமதித்து உள்ளார்கள். அவர்களுடைய தொடர் இருமல், தும்மலால் அந்த தீவிரம் எனக்கும் தொற்றிக் கொள்ளுமோ என பயமாக இருக்கிறது.

எனவே, நான் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்கிறேன் என்று அவர்களிடம் அனுமதி கேட்டேன். அதற்கும் இதுவரை அனுமதிக்கவில்லை. தினமும் காலை, மாலை என இரண்டு வேளை பால் மட்டும் தருகிறார்கள்.கபசுர குடிநீர் ஒரு வேளை தருகிறார்கள். இதையும் கீழே சென்று கூட்டமாக, தனிமனித இடைவெளி இன்றி வரிசையில் நின்று வாங்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று வாங்க வேண்டும். சற்று தாமதம் ஆனாலும், பால் தீர்ந்து விட்டதாக சொல்கிறார்கள்" என்று சொன்னவர்,

"சிகிச்சை தொடர்பாக இதுவரை எந்த மருத்துவரும், செவிலியரும் முறையாக வந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்று கூறி அதிர வைத்தார்.

ராதாகிருஷ்ணன்


இந்த விவகாரங்கள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டதற்கு, "இந்த தவறுகள் குறித்து உடனடியாக விசாரித்து, நடவடிக்கை எடுத்து தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி