கோவிட் எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே இறக்கும் நோயாளிகள்; 18 மணி நேரமாக இறந்தோர் உடலுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள்- டெல்லியில் துயரம்

கோவிட் எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே இறக்கும் நோயாளிகள்; 18 மணி நேரமாக இறந்தோர் உடலுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள்- டெல்லியில் துயரம்

டெல்லி மருத்துவமனை.

டெல்லியின் இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனையின் அவசரநிலைப் பிரிவுக்கு வெளியே கொரோனா நோயாளிகள் மரணமடைவதும், 18 மணி நேரமாகியும் இறந்தோர் உடலைப் பெற முடியாமல் தவிக்கும் உறவினர்களையும் கொண்டதாக உள்ளது டெல்லி நிலவரம்.

 • Share this:
  டெல்லியின் இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனையின் அவசரநிலைப் பிரிவுக்கு வெளியே கொரோனா நோயாளிகள் மரணமடைவதும், 18 மணி நேரமாகியும் இறந்தோர் உடலைப் பெற முடியாமல் தவிக்கும் உறவினர்களையும் கொண்டதாக உள்ளது டெல்லி நிலவரம்.

  5 மருத்துவமனைகளுக்கு கொரோனா பாதிப்பு நோயாளிகளை கொண்டு சென்றும் ஒரு மருத்துவமனையில் கூட படுக்கை வசதி இன்மையால் அனுமதிக்க முடியாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர் நோயாளிகள். டெல்லியில் அதிகரிக்கும் கொரோனாவினால் தினசரி காட்சிகளாக இவை மாறி வருகின்றன.

  டெல்லியில் சாதனை அளவுக்கு கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. டெல்லியின் பெரிய அரசு மருத்துவமனை மற்றும் பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, புது நோயாளிகளுக்கு இடமில்லை. டெல்லியின் 2வது பெரிய அரசு மருத்துவமனையான ஜிடிபி மருத்துமனையில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் நிலைமைகளை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

  ஜிடிபி மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டில் ஸ்ட்ரெச்சர்கள் இரு மடங்கு அதிகமாகியுள்ளன, ஏனெனில் படுக்கை இல்லை, ஸ்ட்ரெச்சரிலேயே சிகிச்சை நடைபெற்று வருகிறது. சில சந்தர்ப்பங்களில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் இருக்க வைக்கப்படுகின்றனர். எமர்ஜென்சி வார்டு ஏற்கெனவே நிரம்பி வழியும் நிலையில் அதன் வாசலில் வரிசைகட்டி நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர்.

  இன்று காலை 11.15 மணியளவில் நினைவு தப்பிய 75 வயது நோயாளி ஒருவர் ஆக்ஸிஜன் அளவு குறைந்த நிலையில் எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவர்கள் ஈசிஜி எடுத்தனர், ஆனால் உறவினர்களிடம் என்ன ஆயிற்று என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. அப்போது நோயாளியின் உறவினருக்கு தெரிந்தது அவர் இறந்திருப்பார் என்பது. ஆனால் நோயாளியை அவர்களது உறவினர்கள் தொடர்ந்து கையை தேய்த்து விடுவது உள்ளங்காலை தேய்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அருகில் இருந்த மனைவி உருக்கமாக, ‘கொஞ்சம் கண் திறந்து பாருங்கள், ஒருமுறை பாருங்கள்’ என்று கூறிக்கொண்டே இருந்தது அங்கிருப்பவர்களிடையே வேதனையை அதிகரித்ததாக ஆங்கில நாளேடு இந்த சூழ்நிலையை வர்ணிக்கின்றது.

  11.45 மணியளவில் கெஞ்சிக் கூத்தாடி இன்னொரு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது, இப்போது ஈசிஜி நேர் கோட்டில் சென்றது. இந்த மரணம் மருத்துவமனையில் பதிவு செய்யப்படவில்லை. அதே போல் 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே ஜிடிபி மருத்துவமனையில் இறந்தே போனார்.

  கணவன் தனிநபராக தன் மனைவியின் உடலை ஆம்புலன்ஸுக்குக் கொண்டு சென்றார், எந்த ஒரு உதவியும் யாரிடமிருந்தும் இல்லை. 1 மணி நேரத்தில் இருவர் உயிர் எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே பிரிந்ததாக முன்னணி ஆங்கில நாளேடு டெல்லி சூழ்நிலையை விவரிக்கின்றது.

  மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை என்னவோ அதுதான் எங்களால் முடிந்ததை செய்கிறோம் என்று மருத்துவர் ஒருவர் ஆதங்கப்பட்டார். தனது மாமாவின் சிகிச்சைக்காக வந்த தீபக் குமார் என்பவர், ஆங்கில ஊடகத்துக்குக் கூறுகையில், “எமர்ஜென்சி வார்டின் உள்ளேயும் வெளியேயும் நிறைய மரணங்கள் நிகழ்கின்றன. மருத்துவர்கள் முயற்சி செய்யவில்லை என்று கூற முடியாது, ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை மிக மிக அதிகம், நான் இங்கு ஒரு இரவு முழுதும் இருந்தேன்” என்றார்.

  இதுதவிர இறந்தோர் உடலைப் பெற முடியாமல் உறவினர்கள் 15-18 மணி நேரம் ஜிடிபி மருத்துவமனை பிணவறை வாசலில் காத்திருக்கின்றனர்.

  காவல் பணியில் இருக்கும் காவலர் ஒருவர், தினமும் 40-45 பேர் இந்த மருத்துவமனையில் இறக்கின்றனர். நாங்கள் எப்படித்தான் சமாளிப்பது? என்கிறார். விதியின் மீது பாரத்தைப் போட்டு, தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு நோயாளிகளுடன் உறவினர்கள் மருத்துவமனைகளில் காத்திருக்கும் துன்பகர நிலையைத்தான் அங்கு காண முடிகிறது என்கிறது அந்த ஆங்கில நாளேடு.
  Published by:Muthukumar
  First published: