அடங்காதவர்களை கண்டதும் சுட உத்தரவு: சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை!

ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் பெட்ரோல் பங்க்கை மூடவேண்டியது இருக்கும் என்றும் தெலங்கான முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

அடங்காதவர்களை கண்டதும் சுட உத்தரவு:  சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை!
சந்திரசேகர ராவ்
  • Share this:
தெலங்கானாவில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றும் நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், இளைஞர்கள் பலர், இரவு பகல் என பைக், காரில் சுற்றி வருகின்றனர். போலீசார் லத்தியால் அவர்களை கடுமையாக தாக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இருந்தபோதும், ஊரடங்கை மதிக்காமல் பலர் சுற்றித்திரிகின்றனர்.


இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகர் ராவ் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காவிட்டால்  போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம் வழங்கப்படும். இல்லை என்றால் ராணுவம் அழைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுபோன்ற நிலையை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம். அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் பெட்ரோல் பங்க்கை மூடவேண்டியது இருக்கும் என்றும் தெலங்கானா முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.Also see... 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading