கொரோனா ஊரடங்கு பாதிப்பு - அரசுக்கு எதிர்க்கட்சிகளின் 11 கோரிக்கைகள்

"தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யும் முடிவுகளை திரும்பப் பெற வேண்டும்"

கொரோனா ஊரடங்கு பாதிப்பு - அரசுக்கு எதிர்க்கட்சிகளின் 11 கோரிக்கைகள்
சோனியா காந்தி
  • Share this:
கொரோனாவால் கால ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 45,000 ரூபாய் வழங்க வேண்டும் என சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற 22 கட்சிகளின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று மற்றும் அது சார்ந்த மக்களின் பிரச்னைகள் தொடர்பாக 22 கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார்.

இதில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, சரத் பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டனர்.


இதில் தொடக்க உரையாற்றிய சோனியாகாந்தி, பொருளாதார மீட்பு குறித்த நிதியமைச்சரின் அறிவிப்புகள் மிகப்பெரும் நகைச்சுவையாக மாறியதாக தெரிவித்தார். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், 13 கோடி ஏழைக் குடும்பங்கள் ஆகியோரின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று சோனியாகாந்தி குறிப்பிட்டார்.

அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும், கூட்டாட்சி தத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளதாகவும் சோனியாகாந்தி தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனையில் உரையாற்றிய ஸ்டாலின், ஏழைகளுக்கும், வேலையிழந்தவர்களுக்கும் மத்திய அரசு நேரடியாக பொருளாதார நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கோரினார்.

விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோரின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளோரின் கடன் தவணையை திருப்பி செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கவும் கோரியுள்ளார்.கூட்டத்தில் மத்திய அரசுக்கு 11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, அனைத்துக் குடும்பங்களுக்கும் 6 மாதங்களுக்கு தலா 7,500 ரூபாய் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவைப்படுவோருக்கு அடுத்த 6 மாதங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும் என்றும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இலவசமாக போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

கொரோனா பரவல் தொடர்பாக துல்லியமான தகவல்களை தருவதுடன் தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யும் முடிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் மாநிலங்களுக்கு தேவையான நிதியை அளிப்பதுடன் ஊரடங்கில் இருந்து வெளியேறும் திட்டம் ஏதேனும் இருந்தால் அது பற்றி தெளிவுபடுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நிவாரணம் மூலம் மக்களை தவறாக வழிநடத்துவதை விட்டுவிட்டு புதிய நிவாரண அறிவிப்பை வெளியிடவும் வலியுறுத்தியுள்ளனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...

 
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading