சென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 70 சதவிகிதத்தைக் கொண்ட 11 நகரங்களில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோப்புப்படம்
- News18
- Last Updated: May 27, 2020, 5:13 PM IST
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்று கட்டமாக ஊரடங்கு கொண்டு வரப்பட்டு, நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. 4 நாட்களில் நான்காம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்தியாவின் மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களான அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
மேற்கண்ட நகரங்களில் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 70 சதவிகிதம் மேற்கண்ட 11 நகரங்களில் உறுதியாகியுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளில் தளர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் ஞாயிறு அன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இது தொடர்பாக அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களான அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
மேற்கண்ட நகரங்களில் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 70 சதவிகிதம் மேற்கண்ட 11 நகரங்களில் உறுதியாகியுள்ளது.