மாதவிடாயும் கொரோனா தடுப்பூசியும்- மருத்துவர் சொல்வது என்ன?

மாதவிடாயின்போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களுக்கும், அப்பெண்ணின் ஆற்றலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறும் சர்வதேச மகப்பேறு மற்றும் பெண்கள் நல அமைப்பு

மாதவிடாயின்போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களுக்கும், அப்பெண்ணின் ஆற்றலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறும் சர்வதேச மகப்பேறு மற்றும் பெண்கள் நல அமைப்பு

  • Share this:
மாதவிடாயின்போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களுக்கும், அப்பெண்ணின் ஆற்றலுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று கூறும் சர்வதேச மகப்பேறு மற்றும் பெண்கள் நல அமைப்பு

மாதவிடாய் காலத்தின்போது 5 நாட்கள் முன்னரோ அல்லது 5 நாட்கள் பின்னரோ பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது என சமூக வலைதளங்களில் சில தினங்களாக உலா வரும் தகவல்களில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மாதவிடாயின்போது பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் தடுப்பூசி போட வேண்டாம் என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என அரசு விளக்கியுள்ளது.

http://

இதுகுறித்து மருத்துவ புரிதலுக்காக பெண்கள் நல மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் கேட்டபோது, ‘நாட்டில் மே 1 முதல் 18 வயதிற்கு மேல் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட உள்ள நிலையில், மாதவிடாயின்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும் என்பதால் மாதவிடாய்க்கு 5 நாட்கள் முன்னும் பின்னும், தடுப்பூசியை போட வேண்டாம் என்ற சமீபத்திய வாட்ஸப் தகவல் முற்றிலும் வதந்தியே. மாதவிடாயின்போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களுக்கும், அப்பெண்ணின் ஆற்றலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறும் சர்வதேச மகப்பேறு மற்றும் பெண்கள் நல அமைப்பு, இதுவரை தடுப்பூசியை ஏற்றுக்கொண்ட பெண்களுக்கு தடுப்பூசியின் காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறி, தடுப்பூசியை மாதவிடாயின்போது மட்டுமன்றி கர்ப்ப காலத்திலும் கூட பரிந்துரைக்கிறது. இந்தியாவில் தற்போதைய 2ஆம் அலையின் தீவிரம் மற்றும் நோயின் பாதிப்புகளை மனதில் கொண்டு, பெண்கள் உட்பட 18 வயதிற்கு மேலான அனைவருமே, தடுப்பூசியை மறவாமல் 2 முறை ஏற்றுக் கொள்ளுமாறு இந்திய மகப்பேறு மருத்துவ சங்கத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறினார்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான முன்பதிவு வரும் 28ஆம் தேதி தொடங்கும் எனவும், http://cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் எனவும் மத்திய அரசின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Archana R
First published: