தமிழக முதல்வர் கோரிக்கையை நிராகரித்த ரயில்வே அமைச்சகம்!

தமிழக அரசின் கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் நிராகரித்து இன்று காலை முதலே ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது.

தமிழக முதல்வர் கோரிக்கையை நிராகரித்த ரயில்வே அமைச்சகம்!
இந்திய இரயில்வே
  • Share this:
மே 31-ம் தேதி வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளை சென்னையில் அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக முதலவரின் கோரிக்கையை  ரயில்வே நிராகரித்தது. 

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும். ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளை சென்னையில் வரும் 31-ம் தேதி வரை அனுமதிக்கக் கூடாது என பல கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த நிலையில் இன்று காலையே சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில் செல்கிறது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோ நோய் தொற்று அதிகரித்து வருகிறது எனவே ரயில், விமான போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை அனுமதிக்க வேண்டாம் என பிரதமரிடம் கடைசியாக நடந்த விடியோ காண்பிரன்ஸ் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.


ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் நிராகரித்து இன்று காலை முதலே ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது.

Also see...
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading