தமிழகத்தில் கொரோனாவின் நிலை என்ன? - தலைமை செயலாளருடன் மத்தியக்குழு ஆலோசனை

தமிழகத்தில் அதிக பாதிப்புகள் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனாவின் நிலை என்ன? - தலைமை செயலாளருடன் மத்தியக்குழு ஆலோசனை
(கோப்புப்படம்)
  • Share this:
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய சுகாதார குழுவினர் தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழகம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் நிலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு நியமித்துள்ள சுகாதார குழு மூன்றாவது முறையாக நேற்று (ஜூலை 8) சென்னை வந்தது.

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில், மத்திய அரசு இணை செயலாளரும், தமிழகத்தின் கண்காணிப்பு அதிகாரியுமான ராஜேந்திர ரத்னா, மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் ரவீந்திரன், மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர்கள் சுகாஸ் தந்துரு, பிரவீன், ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரூப் சாகு, சதிஷ் ஆகிய 7 நபர்கள் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.


Also read... Exclusive | உணவில் புழு, சம்பளத்தில் முறைகேடு...! கொரோனாவுடன் சேர்த்து சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சந்திக்கும் அவலங்கள்

இந்த குழு இன்று (ஜூலை 9) சென்னையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ராஜீவ்காந்தி மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கொரோனா பிரத்யேக மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு செய்தது.

பின்னர் மாலை 4 மணி அளவில், தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து தமிழகத்தில் நோய் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர்.மேலும், தமிழகத்தில் அதிக பாதிப்புகள் உள்ள மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading