சானிடைஸர், முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்ற கடைகளின் லைசென்ஸ் ரத்து!

16 ரூபாய்க்கும் அதிகமாக முகக் கவசங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளது மத்திய அரசு அறிவித்துள்ளது.

சானிடைஸர், முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்ற கடைகளின் லைசென்ஸ் ரத்து!
16 ரூபாய்க்கும் அதிகமாக முகக் கவசங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளது மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • Share this:
தமிழகத்தில் அதிக விலைக்கு சானிடைஸர், முகக் கவசங்களை விற்பனை செய்ததாக 40 கடைகள், வினியோக மையங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, அதைத் தடுக்க உதவும் சானிடைஸர் என்ற கை கழுவும் திரவம் , முகக் கவசம், கையுறை ஆகியவற்றை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.

இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது, பதுக்குவது தொடர்பாக, எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மருந்து கண்காணிப்பு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சில விபரங்களை அளித்துள்ளார்.


அதில் சானிடைஸர், முகக் கவசங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், திடீரென இந்தப் பொருட்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. அதைத் தடுக்க, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை அவசரமாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பொருளுக்கும் அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இரண்டு துணிமடிப்புகொண்ட முகக் கவசத்தின் அதிகபட்ச விலை 8 ரூபாய், மூன்று துணிமடிப்பு கொண்ட முகக் கவசத்தின் அதிகபட்ச விலை 10 ரூபாய், அதே மூன்று துணிமடிப்புடன் பாலித்தின் சுற்றப்பட்ட முகக் கவசத்தின் அதிகபட்ச விலை 16 ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது.

அதேபோல், 200 மில்லி கை கழுவும் திரவத்தின் (சானிடைஸர்) அதிகபட்ச விலை 100 ரூபாய் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வகைப் பொருட்களைப் பதுக்குவதோ, விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி அறிவிப்பதோ சட்டப்படி குற்றமாகும்.தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் இப்பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மருந்துக்கடைகள், வினியோகஸ்தர்கள் என 40 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தவறு செய்பவர்கள் மீது வழக்குப்பதிவானால், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஒழுங்குமுறைச்சட்டத்தின் கீழ் மேலும் 6 மாதங்கள் காவலில் வைக்க முடியும்.

விதிமீறல் தொடர்பாக புகார் தர, தமிழ்நாடு மருந்து கண்காணிப்பு இயக்குநகரத்திற்கு 9444321919 என்ற எண்ணிலும், சிவில் சப்ளை சிஐடி கட்டுப்பாட்டறையை 044-24338972 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading