Home /News /coronavirus-latest-news /

மாநில அரசு முடிவெடுப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் - முதல்வர் நாராயணசாமி

மாநில அரசு முடிவெடுப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் - முதல்வர் நாராயணசாமி

புதுவை முதல்வர் நாராயணசாமி.

புதுவை முதல்வர் நாராயணசாமி.

"மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை அறிவித்துள்ளது."

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கொரோனா விவகாரம் தொடர்பாக இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறும்போது, மாநில அரசு முடிவெடுப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா தொற்றுடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாஹே பகுதியில் உள்ளவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை. எனினும், இன்னொருமுறை சோதித்துப் பார்த்த பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளார் என்றார்.

மேலும், அண்டை மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முனைப்போடு செய்யப்பட்டு வருகின்றார்கள் என கூறிய முதல்வர், இன்று அகில இந்திய காங்கிரஸ் கூட்டம் காணொளி மூலம் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் மத்திய அரசு உதவி குறித்தும் பேசப்பட்டது என்று கூறினார்.

அந்த காணொளி உரையாடலில், தொழில் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மே 17க்குப் பிறகு ஊரடங்கு அதிகரித்தால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த சூழ்நிலையில் உதவ முன்வரவேண்டும். மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை அறிவித்துள்ளது. மத்திய அரசு மண்டலங்களை அறிவிக்கும் முன்பு மாநிலங்களைக் கலந்துகொண்டு அறிவிக்க வேண்டும். இதனை மாநிலத்தின் கையில் விட்டுவிட வேண்டும் என்று நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மாணவ, மாணவிகள் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு தனி அதிகாரியும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ஊருக்குச் செல்ல கோரிக்கை வைத்துள்ளார்கள். வெளிமாநில தொழிலாளர்கள் அவரது மாநிலத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான அனைத்து செலவுகளும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உள்ளோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Lockdown, Narayana samy, Puducherry

அடுத்த செய்தி